Enable Javscript for better performance
நெகிழ்வு கட்டணத் திட்டம் செயல்படுத்தப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? மக்களவையில்- Dinamani

சுடச்சுட

    

    நெகிழ்வு கட்டணத் திட்டம் செயல்படுத்தப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? மக்களவையில் அமைச்சர் விளக்கம்

    By DIN  |   Published on : 04th January 2018 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெகிழ்வு கட்டண திட்டம் செயல்படுத்தப்படும்  ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? என்று மக்களவையில் புதன்கிழமை அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார்.
    இது தொடர்பாக மக்களவையில் நீலகிரி தொகுதி உறுப்பினர் சி.கோபாலாகிருஷ்ணன் துணைக் கேள்வி எழுப்பி பேசுகையில், "சேவை சார்ந்ததாக ரயில்வே துறை இருக்க வேண்டும். 
    தற்போது மறைமுக சேவைகள் மூலம் வருவாயை உயர்த்த ரயில்வே அமைச்சகம் விரும்புகிறது.  தெற்கு ரயில்வேயில் நெகிழ்வு கட்டணத்துடன் கூடிய ரயில்கள் எத்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் செயல்படுத்தப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க அரசு உத்தேசித்துள்ளதா?' என்றார்.
    இதற்கு  மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துப் பேசியதாவது: எத்தனை ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்; என்ன சேவைகள் அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து மறு ஆய்வு செய்வது ஒரு தொடர் நடைமுறையாகும். ஆனால், இவையெல்லாம் வழித்தட கொள்திறன் மற்றும் உள்கட்டமைப்பு இருப்புடன் தொடர்புடையது.  
    எனினும், இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மீதும் ரயில்வே அமைச்சகம் அக்கறை கொண்டுள்ளது.  அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் அரசின் கொள்கையாகும்.  அந்த அடிப்படையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.  ரயில்வே துறையின் விரிவாக்க நடவடிக்கையில் தென்னிந்தியா தொடர்ந்து பயன்பெற்று வருகிறது என்றார் அமைச்சர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai