பனி மூட்டத்தால் விமான சேவை பாதிப்பு: நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தகவல்
By DIN | Published on : 04th January 2018 12:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லியில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடுமையான பனிமூட்டத்தின் காரணமாக சுமார் 500 விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இந்த நிலைமையை மத்திய அரசு கண்காணித்து வருவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயந்த் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை செய்துள்ள பதவில், "விமான சேவை பாதிப்பால் ஏற்பட்ட அசோகரியத்துக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இந்த நிலைமையை அரசு கண்காணித்து வருகிறது. விமான நிலைய செயல்பாட்டின் திறனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக யோசனைகள் இருந்தால் கூறலாம்' என்று தெரிவித்திருந்தார்.
தில்லி விமான நிலையத்தில் காண்புதிறன் கடந்த சில தினங்களாக பூஜ்ஜியத்தில் இருந்தது. இது செவ்வாய்க்கிழமை 200 மீட்டருக்கு வந்தது. பின்னர் காண்புதிறன் அளவு 800- 1000 மீட்டராக அதிகரித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.