Enable Javscript for better performance
பாலக்காடு-பொள்ளாச்சிக்கு புதிய ரயில்கள் இயக்க மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பாலக்காடு-பொள்ளாச்சிக்கு புதிய ரயில்கள் இயக்க மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 04th January 2018 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலக்காடு - பொள்ளாச்சி வழித்தடத்தில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வலியுறுத்தியது.
    இது தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை விதி எண் 377-இன் கீழ் பாலக்காடு  தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் எம்.பி. ராஜேஷ் முன்வைத்த கோரிக்கை: 
    பாலக்காடு - பொள்ளாச்சி வழித்தடம் அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ரூ.400 கோடியில் ஏழு ஆண்டுகள் இப்பணி நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால், பணி முடிந்து ஓராண்டாகியும்,  இந்த வழித்தடத்தில் புதிய ரயில்கள் ஏதும் இயக்கப்படவில்லை. எனவே, புதிய ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.  அதுமட்டுமின்றி, பணிகள் காரணமாக ஏற்கெனவே இயங்கி வந்த ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 
    இந்த வழித்தடம் கேரளத்துடன் தென் தமிழகத்தை இணைக்கிறது.  மேலும்,  தமிழகத்தில் உள்ள பழனி, மதுரை, ராமேசுவரம் போன்ற புனித இடங்களுக்கும், கேரளத்தில் குருவாயூர் கோயிலுக்கும்  புதிய ரயில்களை இயக்குவதற்கான வாய்ப்பையும் இந்த வழித்தடம் கொண்டுள்ளது.  
    இந்த வழித் தடத்தில் புதிய ரயில்களை இயக்குவதன் மூலம் லட்சக்கணக்கான யாத்ரீகர்களுக்கு பெரும் உதவியாக அமையும். 
    எனவே,  பாலக்காடு- பொள்ளாச்சி வழித்தடத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்குவதுடன், கூடுதலாக புதிய ரயில்களையும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. ராஜேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai