Enable Javscript for better performance
புத்தாண்டு: தில்லியில் ரூ. 30 கோடிக்கு மது விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 31-ம் தேதியன்று தில்லியில் ரூ. 30 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
    இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத தில்லி அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "டிசம்பர் 31-ம் தேதியன்று தில்லியில் மதுபான விற்பனை உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் சுமார் ரூ. 30 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. பண்டிகைகள் நிறைந்த டிசம்பர் மாதம் மட்டும் ரூ. 458 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன என்றார் அவர்.
    கடந்த ஆண்டு மதுபான விற்பனையின் மூலம் தில்லி அரசு ரூ. 4,243 கோடி வருவாய் ஈட்டியது. புத்தாண்டு தினத்தன்று தில்லியில் போதையில் வாகனம் ஓட்டியதாக மொத்தம் 1,752 பேர் மீது தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர். புத்தாண்டு தின இரவு கொண்டாட்டங்களின்போது சாலை விதிகளை மீறியதாக மொத்தம் 16,720 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தில்லி போலீஸார் தெரிவித்திருத்து குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai