Enable Javscript for better performance
23 "ஸ்பா'களுக்கு வடக்கு தில்லி மாநகராட்சி  சீல் வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பான வகையில் இயங்கி வந்த 23 ஸ்பாக்கள் புதன்கிழமை சீல் வைக்கப்பட்டன.
    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்த மாநகராட்சிக்குள்பட்ட பிரசாந் விஹார், குரு ஹரி கிஷாண் நகர், ரோஹினி செக்டர்- 7, 8, 9, 10, 11, 13, 14, 15, 18 ஆகிய இடங்களில், மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெறாமல் 50 ஸ்பாக்கள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டன.  அவற்றில்  23 ஸ்பாக்கள் புதன்கிழமை சீல் வைத்து மூடப்பட்டன. இதேபோல, மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் அனுமதி இன்றி இயங்கி வரும் ஸ்பாக்கள் அடையாளம் காணப்பட்டு சீல் வைக்கப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai