Enable Javscript for better performance
ஆசிரியர்கள் நியமனத்தில் கெளரவஆசியர்களுக்கு வயது வரம்பை  தளர்த்த வேண்டும்: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்கள் நியமனத்தில் கெளரவஆசியர்களுக்கு வயது வரம்பை  தளர்த்த வேண்டும்: பாஜக

    By DIN  |   Published on : 05th January 2018 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர் நியமனத்தின்போது கெளரவ ஆசியர்களுக்கு வயது வரம்பை தளர்த்த வேண்டும் என துணைநிலை ஆளுநருக்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இது தொடர்பாக தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தலைமையிலான பாஜக எம்எல்ஏக்கள் ஓ.பி. சர்மா, மன்ஜீந்தர் சிங் சிர்ஸா ஆகியோர் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் விஜேந்தர் குப்தா கூறியது:
    தில்லி மாநகராட்சிப் பள்ளிகளிலும், தில்லி அரசுப் பள்ளிகளிலும் நீண்ட காலமாக கெளரவ ஆசியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற கெளரவ ஆசிரியர்கள் வயது வரம்பைக் கடந்து விடுவதால் ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலவில்லை. மேலும், வயதாகிவிடுவதால் பிற அரசுப் பணிகளுக்கும் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, ஆசிரியர்கள் நியமனத்தின் போது, கெளரவ ஆசிரியர்களின் பணிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும். தில்லி சார்நிலை பணியாளர் தேர்வு வாரியத்தால் சிறப்பு ஆசிரியர் தேர்வின் போது இதுபோன்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தில்லியில் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாகவுள்ளன. எனவே, தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை முதலில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை துணைநிலை ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டுக் கொண்ட துணைநிலை ஆளுநர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார் என்றார் விஜேந்தர் குப்தா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai