Enable Javscript for better performance
ஒரே தடவையில் உருமாற்றக் கட்டணம் செலுத்தும் வணிகர்களுக்கு சலுகைத் திட்டம்: எஸ்டிஎம்சி- Dinamani

சுடச்சுட

    

    ஒரே தடவையில் உருமாற்றக் கட்டணம் செலுத்தும் வணிகர்களுக்கு சலுகைத் திட்டம்: எஸ்டிஎம்சி

    By DIN  |   Published on : 05th January 2018 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வணிக வளாகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள  உருமாற்றக் கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்தும் வணிகர்களுக்கு அபராதத் தொகை மற்றும் வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படவுள்ளதாக தெற்கு தில்லி மாநகராட்சி வியாழக்கிழமை அறிவித்துள்ளது.  இது தொடர்பாக மாநகராட்சி மேயர் கமல்ஜீத் ஷெராவத் கூறியதாவது: 
    2007 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஆண்டு தோறும் செலுத்த வேண்டிய உருமாற்றக் கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்தும் வணிகர்களுக்கு, அபராதத் தொகையில் இருந்தும் வட்டியில் இருந்தும் விலக்களிக்கப்படவுள்ளது.  வணிகர்களின் சிரமங்களைப் புரிந்து கொண்டு  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த 10 ஆண்டுகளாக உருமாற்றக் கட்டணம் செலுத்தாத வணிகர்கள், ஒரே தடவையில் செலுத்தி பயன்பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர். 
    இது தொடர்பாக வணிகர்கள் கூறியதாவது: இருவகையான உருமாற்றக் கட்டணங்கள் உள்ளன. ஒன்று, ஆண்டுதோறும் கட்டப்படும் உருமாற்றக் கட்டணம். இன்னொன்று, குடியிருப்புப் பகுதியை வணிக வளாகமாக மாற்றும் போது ஒரே தடவையில் கட்டப்படும் உருமாற்றக் கட்டணம். குடியிருப்புப் பகுதியை, வணிக வளாகமாக மாற்றுவதற்கு விதிக்கப்பட்ட உருமாற்றக் கட்டணத்தை செலுத்தாத கட்டடங்கள்தான்  சீல் வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில்,  பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் விலக்களிக்கப்பட்டுள்ள உருமாற்றக் கட்டணமானது ஆண்டு தோறும் கட்டப்படும் உருமாற்றக் கட்டணமாகும். இதற்கும் சீல் வைப்பு நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்கள் அவர்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai