Enable Javscript for better performance
காரமடை ரயில்வே மேம்பாலத் திட்டத்துக்கு நிதி வழங்கக் கோரி நீலகிரி எம்.பி. மனு- Dinamani

சுடச்சுட

    

    காரமடை ரயில்வே மேம்பாலத் திட்டத்துக்கு நிதி வழங்கக் கோரி நீலகிரி எம்.பி. மனு

    By DIN  |   Published on : 05th January 2018 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோயம்புத்தூரில் உள்ள காரமடையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு நிதி அளிக்க வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். 
    இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ரயில்வே அமைச்சரின் அலுவலகத்தில் சி.கோபாலகிருஷ்ணன் எம்.பி. அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
    கோயம்புத்தூரில் உள்ள காரமடையில் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணி சீராக நடைபெற்று வருகிறது. எனினும், இதற்கான நிலம் கையகப்படுத்தும் நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், உரிய காலத்தில் திட்டத்தை முடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இத்திட்டத்திற்கான பணி தொடங்கிய பின்னர்தான், நிலம் கையகப்படுத்தும் நடைமுறை ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் இடையே சுமார் 30 மீட்டருக்கு ரயில்வே துறையால் இந்தப் பாலம் கட்டப்பட வேண்டியுள்ளது. பாலத்தின் இரு பக்கத்திலும் நிலம் கையப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது. பொதுவாக, பணி தொடங்குவதற்கு முன்பு திட்டத்திற்கான நிலம் தேவை குறித்து கணக்கெடுக்கப்படுவதும், நிலம் கையகப்படுத்தும் பணி முடிக்கப்படுவதும் வழக்கம். ஆனால், இந்த விவகாரத்தில் கைவசம் உள்ள நிலத்தைக் கொண்டு பணி தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி நிலம் கையகப்படுத்துவதற்குத் தேவையான நிதியை வழங்கவும், திட்டத்தை முடிக்க குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai