Enable Javscript for better performance
குழந்தைகளிடம் பாலியல் குற்றங்கள்: மாநிலங்களவையில் கனிமொழி கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகளிடம் பாலியல் குற்றங்கள்: மாநிலங்களவையில் கனிமொழி கேள்வி

    By DIN  |   Published on : 05th January 2018 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் வேறு இடங்களில் குழந்தைகள் சார்ந்த வேலைவாய்ப்புகள் பெறாமல் இருக்கும் வகையில் அவர்கள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா என்று மாநிலங்களவையில் திமுக கேள்வி எழுப்பியது.
    இது தொடர்பாக வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி துணைக் கேள்வி எழுப்பி பேசியதாவது: 
    குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில்  ஈடுபட்ட  நபர்கள் தற்போது வேறு மாநிலத்திற்கு அல்லது வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள பள்ளிகளிலும்,  குழந்தைகள் தொடர்புடைய வேறு பணிகளிலும் ஈடுபட முடியும். இதனால், அதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த ஆவணங்கள் ஏதும் உள்ளதா?  பல வளர்ந்த நாடுகளில் இதுபோன்று, குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  அப்போதுதான்,  எதிர்காலத்தில் அந்த நபர்கள் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுத்த வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இதனால், நம்மிடம் இதுபோன்ற ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
    இதற்கு மத்திய மனித வளத்துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா பதில் அளித்துப் பேசுகையில், "உறுப்பினர் நல்லதொரு கேள்வியை எழுப்பியுள்ளார்.  இதுபோன்ற ஆவணங்களை மாநில அரசுதான் பராமரித்து வைப்பது வழக்கம். மத்திய அரசிடம் அதுபோன்ற ஆவணங்கள் இல்லை.  ஆனால்,  உறுப்பினரின் யோசனையின் பேரின் நாங்களும் இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கை எடுப்போம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai