Enable Javscript for better performance
சிக்னேச்சர் மேம்பாலப் பணி மே மாதம் முடிவடையும்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி சிக்னேச்சர் மேம்பாலப் பணிகள் மே மாதம் முடிவடைந்து,  சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து நிறுவனம் (டி.டி.டி.சி.) அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 
    இது குறித்து அவர்கள் கூறியதாவது:  யமுனை நதியின் மறுகரையில் உள்ள வடகிழக்கு தில்லியையும், காஜியாபாத்தையொட்டியுள்ள பகுதிகளையும் தில்லியுடன் இணைக்க வாஜிராபாத் பகுதியில் சிக்னேச்சர் மேம்பாலம் தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து நிறுவனத்தால் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. 
    ஆனால், இத்திட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில் வரும் மே மாதத்தில் சிக்னேச்சர் மேம்பாலப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு  சோதனை ஓட்டம் நடைபெறும் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர்.  சிக்னேச்சர் மேம்பாலப் பணிகள் தற்போது 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன. 
    மே மாத மத்தியில்  மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்துப்படவுள்ளது.
    மக்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் முதலில் இரு சக்கர வாகனங்களும்,  இரு மாதங்களுக்குப் பிறகு நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும். பாலங்களில் 
    கேபிள்கள் சரியாகப் பொருத்தப்பட்ட பிறகு, கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai