Enable Javscript for better performance
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறு- Dinamani

சுடச்சுட

    

    சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 05th January 2018 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.
    இது தொடர்பாக மக்களவையில் முக்கிய விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் பூஜ்ய நேரத்தில் நாமக்கல் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் பேசியதாவது:
    கஞ்சமலையில் அமைந்துள்ள பொதுத் துறை நிறுவனமான சேலம் உருக்காலை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்பை மேற்கொள்ளும் மத்திய உருக்கு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. உயர்தர உருக்கு உற்பத்தியில் உலகளவில் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்த ஆலையை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகிறது. இந்நடவடிக்கையை மேற்கொண்டால் அது மக்களின் உணர்வைக் காயப்படுத்தும் செயலாக அமைந்துவிடும். நஷ்டத்தைச் சந்தித்தாலும் விரைவில் இந்த ஆலை மேம்படும். லாபம் ஈட்டும் நிறுவனமாகவும் உருவெடுக்கும். 
    கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆலையின் நிதி நிலைமை தற்போது படிப்படியாக மேம்பட்டுள்ளது. இந்த ஆலையை தனியார்மயமாக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் பிரதமர் நரேந்திர மோடியிடம் அண்மையில் வலியுறுத்தியுள்ளார். எனவே, தமிழக மக்களின் நலன் கருதி , சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசும், உருக்கு அமைச்சகமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai