Enable Javscript for better performance
தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 05th January 2018 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என  மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது. 
    இது தொடர்பாக மக்களவையில் "உயர் நீதிமன்ற,  உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம்  வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திண்டுக்கல்  தொகுதி அதிமுக உறுப்பினர் எம். உதயக்குமார் பேசியதாவது:  
    நீதிபதிகளுக்கான ஊதியம், ஓய்வூதியம் திருத்தம் மட்டுமின்றி,  நீதித் துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்.   தமிழகம் உள்ளிட்ட  பிற மாநிலங்களில் நடைபெறும் புதிய நீதிமன்றங்கள் திறப்பு உள்ளிட்ட  நீதிமன்றம் சார்ந்த அரசு நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும். நாட்டின் தென் பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையைத் தமிழக்தில் அமைக்க வேண்டும்' என்றார் அவர்.
    மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம்:  மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் நாகப்பட்டினம் தொகுதி அதிமுக உறுப்பினர் கே. கோபால்  பேசியதாவது: 
    இயற்கைச் சீற்றங்களாலும், இலங்கை கடற்படையாலும் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் தமிழக மீனவர்கள் உள்ளனர். மீன்வள ஆதாரங்களைப் பாதுகாக்கவும்,  மீனவர் சமூகத்தின் சமூக - பொருளாதார நிலையை மேம்படுத்தவும்  தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்நிலையில்,  மீன்வளத்துக்கும், மீனவர் சமூக மேம்பாட்டுக்கும் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும்,  மீனவர் சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு  மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai