Enable Javscript for better performance
திண்டுக்கல்லை பொலிவுறு நகரமாக மாற்றுவதை உறுதிப்படுத்த மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல்லை பொலிவுறு நகரமாக மாற்றுவதை உறுதிப்படுத்த மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 05th January 2018 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல்லை பொலிவுறு நகரமாக மாற்றுவதை  உறுதிப்படுத்த  மத்திய அரசு  அனைத்து  நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வியாழக்கிழமை வலியுறுத்தியது.
    இது தொடர்பாக மக்களவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் பூஜ்ய நேரத்தில் திண்டுக்கல் தொகுதி அதிமுக உறுப்பினர் எம். உதயக்குமார் முன்வைத்த கோரிக்கை: 
    தமிழகத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திண்டுக்கல் நகரம்,  100 பொலிவுறு நகரங்களுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.  மேலும், வளர்ந்து வரும் நகரமாகவும், கிராமப்புற மக்களை அதிகளவில் ஈர்க்கும் நகரமாகவும் உள்ளது.  
    இதனால், இந்நகரின் மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து வருகிறது.   திண்டுக்கல்லை பொலிவுறு நகரமாக உருவாக்குவது சரியான முடிவாகும். இத்திட்டத்தை செயல்படுத்துவதில்  தேவையான நடவடிக்கைகளை திண்டுக்கல் மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது.  தமிழக அரசு இதற்கான நடவடிக்கையில் ஆர்வம் காட்டினாலும், மத்திய அரசின் சார்பில் இதற்கான  பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படுவதாக  தென்படவில்லை.  எனவே,  திண்டுக்கல்லை பொலிவுறு நகரமாக மாற்றுவதை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai