Enable Javscript for better performance
"தூய்மை நகரப்  பட்டியலில் இடம் பிடிக்க மக்களின் பங்களிப்புத் தேவை'- Dinamani

சுடச்சுட

    

    "தூய்மை நகரப்  பட்டியலில் இடம் பிடிக்க மக்களின் பங்களிப்புத் தேவை'

    By DIN  |   Published on : 05th January 2018 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தரப்படுத்தப்படும் தூய்மை  நகரப் பட்டியலில் வடக்கு தில்லி மாநகராட்சியும் இடம் பெற வேண்டும். அதற்கு மக்களின் பங்களிப்பு தேவை என வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.  அவர் மேலும் கூறியதாவது: 
    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2018- ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரப் பட்டியலுக்கான கணக்கெடுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியுள்ளன. இதில் வடக்கு தில்லி மாநகராட்சியும் இடம்பெற தங்களாலான பங்களிப்பை மக்கள் வழங்க வேண்டும். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற  விவகாரங்கள் அமைச்சகம்  மக்கள் அனைவரும் தூய்மை இந்தியா செயலியை தங்களது தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தங்களது பகுதிகளில் உள்ள கழிப்பிடங்கள் தூய்மை இல்லாமல் இருந்தால் அது தொடர்பாக இந்த செயலி மூலம் மக்கள் புகார் அளிக்கலாம்.  வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுகாதாரம் தொடர்பான புகார்கள்  இருந்தால்  தொலைபேசி உதவி எண்கள் மூலம் தெரிவிக்கலாம்.
    புகார் தெரிவிக்க மேயரி ஹெல்ப்லைன்- 9643096430;  மத்திய கட்டுப்பாட்டு அறை 1266;  கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் - 1800-11-8700, 1800-200-8701 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai