Enable Javscript for better performance
தெற்கு தில்லியில் கழிப்பறைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லியில் கழிப்பறைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க உத்தரவு

    By DIN  |   Published on : 05th January 2018 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகள் அனைத்தும் 24 மணி நேரமும் திறந்திருப்பதை உறுதிப்படுத்துமாறு அனைத்து துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   புதன்கிழமை நடைபெற்ற தெற்கு தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 
    தெற்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் தற்போது கழிப்பறைகள் அனைத்தும் இரண்டு ஷிஃப்டுகளாக செயல்பட்டு வருகின்றன. அதாவது முதல் ஷிஃப்ட காலை 7 முதல் 2 மணி வரையிலும், இரண்டாவது ஷிஃப்ட் மதியம் 2 முதல் இரவு 10 மணி வரையிலும் செயல்படுகின்றன. அனைத்துக் கழிப்பறைகளையும் மக்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையிலும்,  திறந்தவெளியை பொதுமக்கள் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
    இதன்படி, அனைத்து கழிப்பறை வளாகங்களும் 24 மணி நேரம் திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணியில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சித் தலைவர் ஷிக்கா ராய் தெரிவித்தார். கடந்த ஆண்டு தெற்கு தில்லியில் 348 சமூதாய கழிப்பறைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 32 சமூதாயக் கழிப்பறைகள்தான் கட்டப்பட்டன. இதேபோல, 440 பொதுக் கழிப்பறைகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 97 பொதுக் கழிப்பறைகள்தான் கட்டப்பட்டன. இது போக தில்லி நகர்ப்புற குடிசை மாற்று வாரியம் சார்பில் 60 கழிப்பறை வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 617 கழிப்பறை வளாகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர 36 நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai