Enable Javscript for better performance
தொடர்கிறது அடர் பனிமூட்டம்: 20 விமானங்கள், 60 ரயில்கள் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    தொடர்கிறது அடர் பனிமூட்டம்: 20 விமானங்கள், 60 ரயில்கள் தாமதம்

    By DIN  |   Published on : 05th January 2018 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை அதிகாலையில் அடர் பனிமூட்டம் நிலவியது. இதனால், விமான சேவை, ரயில் சேவை ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 
    கடந்த வாரத்திலிருந்தே பனிமூட்டம் கடுமையாக இருந்து வருகிறது.  காற்று மாசு பிரச்னையும் தீவிரமாக உள்ளது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் நிலவி வருகிறது.  இதன் காரணமாக விமானம், ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 
    இந்நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமையும் அடர் பனிமூட்டம் நிலவியதால் காண்பு திறன் வெகுவாகக் குறைந்தது. இதனால், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன. தில்லி விமானநிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காண்பு திறன் காலை வேளையில் குறைவாக இருந்ததால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    இதேபோல, தில்லி உள்பட பல்வேறு வட மாநிலங்களில் நிலவிவரும் கடும் பனி மூட்டத்தால் ரயில் சேவையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 60 ரயில்கள் தாமதமாக சென்று கொண்டிருந்ததாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 14 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. 18 ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது என்று வடக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
     காலை 5.30 மணியளவில் காண்புதிறன் 300 மீட்டராக இருந்தது. பின்னர் 8.30 மணியளவில் இது 500 மீட்டராக உயர்ந்தது.  காலை 8.30 மணி நிலவரப்படி காற்றில் ஈரப்பதத்தின் அளவு 100 சதவீதமாக பதிவாகியிருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி குறைந்து 5 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai