Enable Javscript for better performance
பெருந்துறையில் "எய்ம்ஸ்' அமைக்க வலியுறுத்தி ஜே.பி. நட்டாவிடம் திருப்பூர் எம்.பி. மனு- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறையில் "எய்ம்ஸ்' அமைக்க வலியுறுத்தி ஜே.பி. நட்டாவிடம் திருப்பூர் எம்.பி. மனு

    By DIN  |   Published on : 05th January 2018 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் வி.சத்யபாமா நேரில் வலியுறுத்தினார்.
    இது தொடர்பாக அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் புதன்கிழமை அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
    தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனை அமைக்கும் அறிவிப்பை அறிவித்ததற்காக பிரதமருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும் தமிழக மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இதற்காக தமிழகத்தில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை உள்பட ஐந்து பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்து மத்திய அரசிடம் அளித்திருந்தார். மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை விரைவுபடுத்துமாறும் வலியுறுத்தியிருந்தார்.
    பெருந்துறையில் ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 327 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஈரோடுக்கு மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்த மருத்துவமனை, கோவை - சேலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 47-இல் அமைந்துள்ளது. நோயாளிகளுக்கு போக்குவரத்து வசதியை அளிக்கும் வகையில், தேவையான பேருந்து, ரயில் தொடர்பு வசதியும் உள்ளது. ஆகவே, நிகழாண்டில் குடியரசுத் தின பரிசாக பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    இதுகுறித்து வி.சத்யபாமா வியாழக்கிழமை கூறுகையில், "பெருந்துறையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்தேன். அப்போது, மத்தியக் குழு ஏற்கெனவே பெருந்துறை இடத்தை பார்வையிட்டதையும், மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து தகுதிகள்இருப்பதையும் அமைச்சரிடம் தெரிவித்தேன். இந்த மருத்துவமனை அமைந்தால், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தேன். இது குறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் கூறினார் என்றார் வி.சத்யபாமா. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai