Enable Javscript for better performance
ரயில் உபயோகிப்பாளர் கவுன்சில் உறுப்பினராக வேணுகோபால் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில் உபயோகிப்பாளர் கவுன்சில் உறுப்பினராக வேணுகோபால் நியமனம்

    By DIN  |   Published on : 05th January 2018 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனைக் கவுன்சில் (என்ஆர்யுசிசி) உறுப்பினராக நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவரும், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டாக்டர் பி. வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
    இது தொடர்பாக அவருக்கு மத்திய ரயில்வே  அமைச்சர் பியூஷ் கோயல் கடிதம் எழுதியுள்ளார். அதில், இப்பதவிக்கான காலம் 2019, ஏப்ரல் 16-ஆம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேணுகோபால் எம்.பி. வியாழக்கிழமை கூறுகையில், "தேசிய ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் கவுன்சிலில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இக்கவுன்சில் மூலம் பயணிகளின் நலனுக்காக உரிய பணிகளை மேற்கொள்வேன்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai