Enable Javscript for better performance
ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் வைத்திருந்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லி ரோஹிணி பகுதியில் பாபா சாஹேப் அம்பேத்கர் (பிஎஸ்ஏ) மருத்துவமனை அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். 
    இது குறித்து காவல் துறை அதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: போதைப் பொருள்களுடன் ஒருவர் பிஎஸ்ஏ மருத்துவமனை அருகே வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது ஹெராயின் போதைப்பொருளுடன் ஒருவர் சிக்கினார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் மங்கோல்புரியைச்சேர்ந்த வினோத் குமார் என்று அடையாளம் காணப்பட்டது. அவரிடமிருந்து 200 கிராம் எடையுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1 கோடியாகும். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai