Enable Javscript for better performance
ரோஹிணி ஆசிரம நிறுவனர்கள் எங்கே?: அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ரோஹிணி ஆசிரம நிறுவனர்கள் எங்கே?: அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு

    By DIN  |   Published on : 05th January 2018 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரோஹிணி ஆசிரமத்தில் பெண்களை விலங்குகளைப்போல் பூட்டி வைத்திருந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் ஆசிரமத்தின் நிறுவனர்கள் எங்கே உள்ளனர் என்பது குறித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
    அப்போது, நீதிபதிகள் அமர்வு கூறியதாவது:
    ஆசிரமத்தில் உள்ள பெண்களின் உறவினர்கள், ஆசிரமத்திற்கு எதிராக புகார்களை அளிக்காமல் இருக்க அவர்கள் மீது ஆசிரமத்தில் உள்ள பெண்களே பொய் புகார் அளித்திருப்பது நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு மூலம் தெரியவந்துள்ளது. பொய் தகவல்களை இணையதளம், யூ டியூப் மூலம் பரப்பி இந்த ஆசிரமம் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஆசிரமத்தின் நிறுவனர்கள் எங்கே உள்ளனர் என்பது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai