Enable Javscript for better performance
குடிசைப் பகுதிகளை தில்லி அரசிடம்  ஒப்படைத்தால் மறுசீரமைப்பு: துணைநிலை ஆளுநருக்கு கேஜரிவால் கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    குடிசைப் பகுதிகளை தில்லி அரசிடம்  ஒப்படைத்தால் மறுசீரமைப்பு: துணைநிலை ஆளுநருக்கு கேஜரிவால் கடிதம்

    By DIN  |   Published on : 06th January 2018 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் இடங்களில் உள்ள குடிசைப் பகுதிகள், ஜே.ஜே பஸ்திகள் ஆகியவற்றை தில்லி அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லி துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
     கத்புத்லி காலனி மறுசீரமைப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அரவிந்த் கேஜரிவால் இந்தக் கடிதம் எழுதியுள்ளார்.
    அதில், தில்லியில் உள்ள மொத்தம் 657 ஜே.ஜே. பஸ்திகளில், 333 ஜே.ஜே. பஸ்திகள் தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தப் பகுதிகள் அனைத்து ஜே.ஜே. பஸ்திகளும், குடிசைப் பகுதிகளும் தில்லி அரசின் கட்டுப்பாட்டில் அளித்தால் மூன்று ஆண்டுகளுக்குள் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். கத்புத்லி காலனியில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள கடந்த 2009-ஆம் ஆண்டு 13 ஏக்கர் நிலத்தை ரஹேஜா மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அங்கு இதுவரை குறிப்பிடத்தக்க எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 
    அந்தப் பகுதியில் பெரும்பாலான இடம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஆகையால், கடந்த மாதம் தில்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்த தில்லி குடிசை, ஜே.ஜே. மறுசீரமைப்பு கொள்கையின்படி, தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜே.ஜே. பஸ்திகளை தில்லி அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai