Enable Javscript for better performance
கும்ப கர்ணன் தூக்கம் கலைந்துவிட்டதா? கோபால் ராய்க்கு குமார் விஸ்வாஸ் பதிலடி- Dinamani

சுடச்சுட

    

    கும்ப கர்ணன் தூக்கம் கலைந்துவிட்டதா? கோபால் ராய்க்கு குமார் விஸ்வாஸ் பதிலடி

    By DIN  |   Published on : 06th January 2018 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி அரசை கவிழ்க்க கபில் மிஸ்ராவுடன் இணைந்து  சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைச்சர் கோபால் ராய் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் "கும்ப கர்ணன் தூக்கம் இப்போதுதான் கலைந்ததா?' என்று குமார் விஸ்வாஸ் விமர்சித்துள்ளார்.
    தில்லி அமைச்சர் கோபால் ராய் வியாழக்கிழமை அளித்த பேட்டியின் போது, "தில்லியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 
    மாநகராட்சித் தேர்தல் நடைபெற்ற பிறகு, தில்லி அரசை கவிழ்க்க விஸ்வாஸ் சதி செய்துள்ளார். 
    இதற்கான சதித்திட்டத்தை அப்போதைய ஆம் ஆத்மி அமைச்சர் கபில் மிஸ்ராவுடன் கூட்டு சேர்ந்து சில எம்எல்ஏக்களுடன், குமார் விஸ்வாஸ் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். 
    இதனால்தான் கபில் மிஸ்ரா பின்னர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்' என்று தெரிவித்திருந்தார்.
    பதிலடி: இந்த விவகாரம் தொடர்பாக  குமார் விஸ்வாஸ் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
    5 மாநிலங்களுக்கான  கட்சியின் பொறுப்பாளர்,  கட்சியின்  தில்லி தலைவர், கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழு உறுப்பினர்,  தேசிய செய்தி தொடர்பாளர்,   சட்டப்பேரவை உறுப்பினர், தில்லி அமைச்சர் என 9 பதவிகளை வகித்து வருகிறார் கோபால் ராய்.  7 மாதங்களுக்கு பிறகு, அவரது கும்ப கர்ணன் தூக்கம் தற்போதுதான் கலைந்துள்ளது. அவர் தெரிவித்துள்ள விமர்சனத்துக்கு பின்னணியில் வேறு சிலர் உள்ளனர்.  ஒவ்வொரு முறையும் எனக்கு எதிராக  "கட்டப்பா'க்கள் உருவாக்கப்பட்டு இதுபோன்று முன் நிறுத்தப்படுகிறார்.  
    காங்கிரஸ், பாஜகவிலிருந்து புதிதாக கட்சியில் சேரும் குப்தாக்களின் பங்களிப்பின் ஆனந்தத்தை பெறுமாறு கோபால் ராயை வேண்டுகிறேன். 
    என் மீது பழி போட்டு மல்லு கட்ட வேண்டாம்.  பாபர்பூரில் பொதுக்கூட்டம் நடத்தி கோபால் ராயை வெற்றி பெற வைப்பதற்காக  தொண்டர்களுடன் சென்றேன். அதுபோல, இந்த முறை சுஷீல் குமாருக்காக பொதுக்கூட்டம் நடத்துங்கள். அவர் நாடாளுமன்ற உறுப்பினராகட்டும்; பிரதமராகட்டும். 
    வட கோரியா அதிபர் கிம் ஜானின் அச்சுறுத்தலில் உலகத்தை காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகி சுஷீல் குமார் அமைதியை நிலைநாட்டட்டும்.  இதுபோன்றவற்றை எண்ணி மகிழ்ந்திடுங்கள் என்று கோபால் ராய்க்கு  குமார் விஸ்வாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai