Enable Javscript for better performance
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும்: அதிமுக வலியுறுத்தல் 

    By DIN  |   Published on : 06th January 2018 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையிலுள்ள செம்மொழி தமிழாய்வு  மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைப் போற்றிப் பாதுக்காக்க அதை திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் வி.  மைத்ரேயன் வலியுறுத்தினார்.
    இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அவர் முன்வைத்த கோரிக்கை: 
    மத்திய அரசு தற்போது சென்னையிலுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  இதற்கான திட்டவரைவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு  நீதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. இது தவறான கொள்கை முடிவாகும்.  உலக மொழிகளில் மிகவும் பழைமை வாய்ந்த, தனிச் சிறப்பு மிக்க தமிழ் மொழியை மத்திய அரசு கடந்த 2004 -ஆம் ஆண்டு செம்மொழியாக அங்கீகரித்து அறிவிப்பை வெளியிட்டது. 3,000 ஆண்டு  நீண்ட வரலாறு கொண்ட பழம்பெருமை வாய்ந்த தமிழ் மொழி,  இலக்கியங்கள் ஆகியவை மொழி ஆய்வாளர்களின் மாபெரும் பொக்கிஷமாக விளங்குகிறது. சான்றோர்கள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய மூலாதார தமிழ் இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ், ஒரு தன்னிகரில்லா செம்மொழியாகும். தமிழின் செம்மொழிச் சிறப்பியல்புகளை போற்றிடவும், அதன் அருமை பெருமைகளை  உலகம்  முழுவதும் பரப்பும் நோக்கத்திலும்  சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்கியது. 
    இத்தகைய அரிய பெருமை கொண்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் எந்த ஒரு முடிவும்  அதன் தன்னாட்சிக்கு  பாதிப்பை ஏற்படுத்தும். 
    எனவே, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை  மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க  "நீதி ஆயோக்' அளித்துள்ள பரிந்துரையை தொடக்கத்திலேயே  முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மேலும், அது சென்னையிலேயே இயங்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai