Enable Javscript for better performance
தில்லி பல்கலை. மாணவர் சேர்க்கை: ஆன்லைன் விண்ணப்பங்களில் பிழைகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி பல்கலை. மாணவர் சேர்க்கை: ஆன்லைன் விண்ணப்பங்களில் பிழைகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுமா?

    By DIN  |   Published on : 06th January 2018 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2018-19 கல்வியாண்டுக்கான தில்லி பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஆன் லைன் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் பிழைகளை திருத்திக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.
    தில்லி பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்பினால் அதை மீண்டும் மாணவர்களால் பார்வையிட முடியாது நிலை தற்போது உள்ளது. விண்ணப்பப் படிவங்களில் பிழைகள் ஏதும் ஏற்பட்டிருந்தால், அதைத் திருத்துவதற்கு வழி இல்லை. 2018-19 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஆன்-லைனில் விண்ணப்பிக்கப்படும் படிவங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வழிவகை செய்ய பல்கலை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பல்கலை. நிர்வாகத் தரப்பு அதிகாரிகள் கூறியதாவது: 
    மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தவறுதலாக சில தரவுகளை வழங்கி விடுகின்றனர். அதில் பிழைகள் இருந்தால் திருத்துவதற்கு இதுவரை வசதி செய்யப்படவில்லை. இதனால், குறிப்பிட்ட மாணவருக்கு இடம் கிடைக்காமல் போகும் வாய்ப்பு ஏற்படுகிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பிய பிறகும் குறிப்பிட்ட சில நாள்களுக்குள் அதில் திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை தனித்தனியாக நடைபெற்று வந்த, வெளிநாட்டு மாணவர் சேர்க்கை மற்றும் இந்திய மாணவர் சேர்க்கை இனிமேல் ஒன்றாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வாகியுள்ள மாணவர்கள் பல்கலை.யில் சேர்வதற்கான காலத்தை ஒரு மாதமாக நீட்டிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர் சேர்க்கை மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றனர்.
    இது குறித்து மாணவர்கள் கூறுகையில், "இடம் கிடைத்த மாணவர்கள் வகுப்புகளில் சேர்வதற்கு கால அவகாசம் வழங்கப்படும்பட்சத்தில், சான்றிதழ் தொடர்பான குறைபாடுகளைப் பதற்றமின்றி தீர்த்துக் கொள்ள வசதி ஏற்பட்டுள்ளது' என்றனர். 
    வர்த்தகக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு: இந்நிலையில், தில்லிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், "பி.காம்., பி.காம். (ஹானர்ஸ்) ஆகிய படிப்புகளை மாணவர்கள் அதிகம் விரும்பிப் படிக்கின்றனர். இப்படிப்புகளுக்கு 12- ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், இந்தக் கல்வியாண்டு முதல், இப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளஸ்-2-இல் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட, நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறந்த கல்லூரிகளில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்' என்றனர்.

     


    மாணவர் சேர்க்கைக்கு  விரைவில் குழு  துணைவேந்தர் யோகேஷ் தியாகி
    47 உறுப்பினர்களைக் கொண்ட மாணவர் சேர்க்கை குழு விரைவில் அமைக்கப்படவுள்ளதாக தில்லி பல்கலைக்கழக துணை வேந்தர் யோகேஷ் தியாகி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இந்த ஆண்டு 47 உறுப்பினர்களைக் கொண்ட சேர்க்கைக் குழு அமைக்கப்படும். 2017-18 கல்வியாண்டுக்கான குழுவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் இந்தக் குழுவிலும் இடம் பெறுவர். இந்தக் குழுவின் தலைவராக மகராஜ் பண்டிட் நீடிப்பார்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai