Enable Javscript for better performance
தொழிலதிபரிடம் ரூ.2 கோடி  கேட்டு மிரட்டல்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.2 கோடி பணம் கேட்டு தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக தேவேந்தர் குமார் (34), ஜிதேந்தர் குமார் (29) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
    ரூ.2 கோடி அளிக்கவில்லை என்றால் மகனைக் கொலை செய்து விடுவதாக கடந்த 2-ம் தேதி தொலைபேசி மிரட்டல் வந்ததாக ப்ரீத் விஹார் காவல் நிலையத்தில் அந்தத் தொழிலதிபர் புகார் அளித்திருந்தார்.
    இதேபோன்று கடந்த டிசம்பர் 8-ஆம் தேதியும் மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் அந்தத் தொழிலதிபரிடம் பணியாற்றியவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் ஊழியர் ஒருவருடன் கூட்டு சேர்ந்து தொலைபேசியில் தொழிலதிபரிடம் மிரட்டல் விடுத்ததாக தேவேந்தர் குமார் (34), ஜிதேந்தர் குமார் (29) ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸார் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai