Enable Javscript for better performance
நிலுவை ஊதியத்தை  ஒரு மாதத்தில் வழங்க தில்லி மாநகராட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    நிலுவை ஊதியத்தை  ஒரு மாதத்தில் வழங்க தில்லி மாநகராட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 06th January 2018 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிழக்கு, வடக்கு தில்லி மாநகராட்சிகளின் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தரப்பட வேண்டிய நிலுவை ஊதியத்தை ஒருமாதத்தில் வழங்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல் அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் பிறப்பித்த உத்தரவு:
    கிழக்கு, வடக்கு தில்லி மாநகராட்சிகளின் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கடந்த மாத ஊதியத்தை ஒரு வாரத்துக்குள்ளும், மீதமுள்ள நிலுவைத் தொகையை ஒரு மாதத்துக்குள்ளும் வழங்க வேண்டும். மேலும், மாநகராட்சியின் மற்ற ஊழியர்களுக்கும் குறித்த நேரத்தில் ஊதியம் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். 
    ஆசிரியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் ஊதிய நிலுவை விவகாரத்தில் கிழக்கு தில்லி மாநகராட்சி சந்தித்து வரும் சிரமங்கள் தொடர்பாக நிலவர அறிக்கையை ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai