Enable Javscript for better performance
பாஜகவின் "பி - டீம்' ஆம் ஆத்மி கட்சி: காங்கிரஸ் விமர்சனம்- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவின் "பி - டீம்' ஆம் ஆத்மி கட்சி: காங்கிரஸ் விமர்சனம்

    By DIN  |   Published on : 06th January 2018 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜகவின் "பி - டீம்' ஆம் ஆத்மி கட்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    தற்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் என்.டி. குப்தா போட்டியிடுகிறார். அவரை நேஷனல் பென்ஷன் சிஸ்டம் டிரஸ்டின் தலைவராக பாஜக அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு நியமித்தது. 
    ஜிஎஸ்டிக்கு ஆதரவாக பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் சார்பிலான கூட்டம் தில்லியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. என்.டி. குப்தாவின் மகன் நவீன் குப்தா ஏற்பாடு செய்த அக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த இரு நிகழ்வுகளும் என்.டி. குப்தா, பாஜகவுக்கு எவ்வளவு நெருக்கம் என்பதைக் எடுத்துக் காட்டுகிறது.
    பாஜகவுக்கு நெருக்கான என்.டி. குப்தா ஆம் ஆத்மி கட்சி மூலம் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதுபோல, மாநிலங்களவைக்கு போட்டியிடும் மற்றொரு உறுப்பினர் சுஷீல் குப்தாவும் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அப்போது, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளார். 
    காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய 36 நாளில் அவருக்கு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மூத்த தலைவர் கரண் சிங்கும், கல்வியாளர் ஜனார்தன் துவிவேதியும் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோன்ற மதிப்புமிக்க தலைவர்களுக்குப் பதிலாக தற்போது சுஷீல் குப்தா, என்.டி. குப்தா ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்த இருப்பது துரதிர்ஷடவசமானது என்றார் அஜய் மாக்கன்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai