Enable Javscript for better performance
வருகையைப் பதிவு செய்யும் மென்பொருள்: அனைத்து கல்லூரிகளுக்கும் கட்டாயமாக்க தில்லி பல்கலை. திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வருகையைப் பதிவு செய்யும் மென்பொருள்: அனைத்து கல்லூரிகளுக்கும் கட்டாயமாக்க தில்லி பல்கலை. திட்டம்

    By DIN  |   Published on : 06th January 2018 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருகையைப் பதிவு செய்யும் மென்பொருளை அனைத்துக் கல்லூரிகளுக்கும் கட்டாயமாக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தில்லி பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
    இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: தில்லி பல்கலைக்கழகத்தின் கீழுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்கள் வருகையை மென்பொருள்  மூலம் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குவது  தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்.  குறைந்த செலவில் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவாத அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 
    இந்நிலையில், தில்லிப் பல்கலைக்கழகத்தின் சில கல்லூரிகள் மாணவர் வருகையை மென்பொருள்  மூலம் பதிவு செய்கின்றன.  தில்லி பல்கலைக்கழகத்தின் ஆச்சார்யா நரேந்திர தேவ் கல்லூரி (ஏ.என்.டி.சி.) வருகையைப் பதிவு செய்யும் மென்பொருள்  ரூ.1 கோடி  செலவில் உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏ.என்.டி.சி. கல்லூரி முதல்வர் சாவித்திரி சிங் கூறியதாவது: 
    கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் மென்பொருள் உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறோம். 
    இந்த மென்பொருள், வருகையை மட்டும் பதிவு செய்யப் பயன்படவில்லை. நூலக ஒருங்கிணைப்பு, தேர்வு ஒருங்கிணைப்பு உள்பட 22 பணிகளைச் செய்ய இந்த மென்பொருள் பயன்படும்' என்றார். ஆனால், இந்த மென்பொருளால் மாணவர்களின் வருகையை மட்டுமே பதிவு செய்ய முடியும் என அக்கல்லூரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai