Enable Javscript for better performance
விலை போய்விட்டார்  முதல்வர் கேஜரிவால்: பாஜக குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    விலை போய்விட்டார்  முதல்வர் கேஜரிவால்: பாஜக குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 06th January 2018 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "மாநிலங்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தொழிலதிபர் சுஷீல் குப்தாவை போட்டியிட தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பணத்துக்கு விலை போய்விட்டார். சுஷில் குப்தாவை மாநிலங்களை வேட்பாளராக அறிவிக்க எத்தனை கோடி கைமாறப்பட்டுள்ளது என்பதை கேஜரிவால் தெளிவுபடுத்த வேண்டும்' என்று பாஜகவின் தில்லி  தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.  
    இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஊழலை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த கேஜரிவால், ஊழலுக்கு அடிமையாகிவிட்டார். 
    அரசு மருத்துவமனைகளின் தரம் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வரும் வேளையில், தனியார் மருத்துவமனையொன்றின் நிறுவனரான சுஷீல் குப்தாவை, மாநிலங்களவை வேட்பாளராக கேஜரிவால் அறிவித்து மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்.
      தில்லி அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.  758- ஆக இருந்த ஜி.பி.பந்த் மருத்துவமனையின் படுக்கைகளின்  எண்ணிக்கை, தற்போது 735 ஆகக் குறைந்துள்ளது. 
    ஜனக்புரி சிறப்பு மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகள் உள்ளது. ஆனால்,  100 படுக்கைகளே நோயாளிகளின் பயன்பாட்டிற்கு உள்ளன. 
    இந்நிலையில், தனியார் மருத்துவமனை நிறுவனரை வேட்பாளராக நியமித்ததன் பின்னணியில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது.  சுஷீல் குப்தாவை 
    நியமித்ததில் கைமாறியுள்ள தொகை தொடர்பாக கேஜரிவால் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்  அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai