Enable Javscript for better performance
அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மருத்துகள் விநியோகம்: விஜேந்தர் குப்தா புகார்- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மருத்துகள் விநியோகம்: விஜேந்தர் குப்தா புகார்

    By DIN  |   Published on : 07th January 2018 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லிஅரசு மருத்துவனைகளில் தரம் குறைந்த மருந்துகள் விநியோகம் செய்யப்படுவதாக சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா குற்றம்சாட்டியுள்ளார்.
    இதுகுறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது: தில்லி அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தரம் குறைந்த மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. ஜி.பி. பந்த் மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் தரம் குறைவான 20 ஆயிரம் ஸ்டிரிப்களை விநியோகித்திருப்பதாக விநியோகஸ்தரே தெரிவித்துள்ளார். 
    இவ்வாறு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்து நோயாளிகளின் உயிர்களுடன் தில்லி அரசு விளையாடி வருகிறது. இதற்கு தில்லி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மருந்துகளை தரம் அறியும் அமைப்பு தூங்கிக் கொண்டிருக்கிறது.
    இந்த விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தில்லி அரசும் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து, தரம் குறைந்த மருந்துகள் அளிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையைக் கண்டறிய வேண்டும். இந்த விவகாரத்தில் செல்வாக்கு படைத்தவர்களுக்கு தொடர்பு இருக்கும் பட்சத்தில் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாத வகையில் தடுக்க வேண்டும் என்றார் விஜேந்தர் குப்தா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai