அரிமா சங்கத்துக்குப் பாராட்டு
By DIN | Published on : 07th January 2018 12:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வடக்கு தில்லி மக்களுக்கு அரிமாக் கழகம் பேருதவி செய்து வருவதாக மாநகராட்சியின் நிலைக் குழுத் தலைவர் திலக் ராஜ் கட்டாரியா பாராட்டுத் தெரிவித்தார்.
வடக்கு தில்லியில் அரிமா சங்கம் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மக்களுக்கு சேவையாற்றுவதில் அரிமா சங்கத்தினர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகின்றனர்.
வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பல பகுதிகளில் அரிமா சங்கத்தினர் தங்களின் பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.
மாநகராட்சிக்குள்பட்ட பல பூங்காக்களில் திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடத்தை உருவாக்க அரிமா சங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது.
மேலும், இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தி பொதுமக்களுக்கு சேவையாற்றியுள்
ளது என்றார் திலக் ராஜ் கட்டாரியா.