Enable Javscript for better performance
என்டிஎம்சியில் கழிப்பறைகள் பராமரிப்பதற்கு தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை- Dinamani

சுடச்சுட

    

    என்டிஎம்சியில் கழிப்பறைகள் பராமரிப்பதற்கு தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை

    By DIN  |   Published on : 07th January 2018 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறைகளைப் பராமரிக்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டும் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளைப் பராமரிப்பது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு தனியார் நிறுவனமும் இதற்கு விண்ணப்பிக்கவில்லை. 
    கழிப்பறைகளை கட்டுவதற்கு ஆர்வம் காட்டும் தனியார் நிறுவனங்கள், ஏற்கனவே கட்டப்பட்ட கழிப்பறைகளை மாநகராட்சியுடன் இணைந்து பராமரிக்க ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களின் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு செயல்பாடுகள் மூலம், பொதுக் கழிப்பறைகளின் தரத்தை மேம்படுத்தினால் பயனுடையாத அமையும்' என்றனர். 
    கடந்த டிசம்பர் மாதம் 31- ஆம் தேதி "வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட 104 வார்ட்டுகளிலும் போதுமான எண்ணிக்கையில் கழிப்பிடங்கள் உள்ளதாகவும், இதனால் திறந்த வெளியை கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தாத மாநகராட்சியாக வடக்கு தில்லி மாநகராட்சி உருவாகியுள்ளது என்று அதன் மேயர் 
    ப்ரீத்தி அகர்வால் தெரிவித்திருந்தார்.
    இந்நிலையில், இரவுநேரத்திலும் மாநகராட்சிக் கழிப்பறைகளை மக்களின் பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் திறந்து வைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக மேயர் ப்ரீத்தி 
    அகர்வால் சனிக்கிழமை தெரிவித்தார். 
    அவர் மேலும் கூறுகையில், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே பொதுக் கழிப்பறைகள் இரவு நேரங்களில் மூடப்பட்டுள்ளன. 
    இரவு நேரங்களில் கழிப்பறைகளை திறந்து வைத்திருப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவு சாதகமாக இருந்தால் இரவு நேரங்களிலும் கழிப்பறைகள் திறந்து வைக்கப்படும்' என்றார்.
    இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரப் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான முயற்சிகளில் வடக்கு தில்லி மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாக அதன் ஆணையர் மதூப் வியாஷ் தெரிவித்தார். அவர் கூறுகையில், "பொது இடங்களில் மலம், சிறுநீர் கழித்தலுக்கு எதிராக "ரோகோ டோகோ சீதி பஜோ' பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம்' என்றார். 
    2016-17-ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரப் பட்டியலில் கிழக்கு தில்லி மாநகராட்சி 196- ஆவது இடமும், தெற்கு தில்லி மாநகராட்சி 202- ஆவது இடமும், வடக்கு தில்லி மாநகராட்சி மிகவும் பின்தங்கி 279- ஆவது இடமும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai