Enable Javscript for better performance
தில்லி மகளிர் காங்கிரஸ் தலைவராக ஷர்மிஸ்தா முகர்ஜி நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மகளிர் காங்கிரஸ் தலைவராக ஷர்மிஸ்தா முகர்ஜி நியமனம்

    By DIN  |   Published on : 07th January 2018 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மகளிர் காங்கிரஸ் தலைவராக ஷர்மிஸ்தா முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை பிறப்பித்துள்ளார்.
    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஸ்தா முகர்ஜி, தற்போது தில்லி காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வருகிறார். தில்லி மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த பர்கா சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியை ராஜிநாமா செய்தார். 
    இதையடுத்து, சாய் அனாமிகா, தில்லி மகளிர் காங்கிரஸின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தில்லி மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதிய தலைவராக ஷர்மிஸ்தா முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
    இதேபோல், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள திருபுரா மாநிலத்தின் மகளிர் காங்கிரஸ் தலைவராக ஜைதமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான ஜைதமி, கடந்த திருபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சௌவ்மவ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai