Enable Javscript for better performance
மக்களின் குறைகளைக் களைய தனி அதிகாரியை நியமித்தது தில்லி அரசு- Dinamani

சுடச்சுட

    

    மக்களின் குறைகளைக் களைய தனி அதிகாரியை நியமித்தது தில்லி அரசு

    By DIN  |   Published on : 07th January 2018 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒய்வூதியதாரர்களின் பென்சன் தொகை, கணவன் இல்லாத பெண்களுக்கான உதவித் தொகை போன்ற தில்லி அரசின் உதவித் தொகைகளைப் பெறுவதில் உள்ள குறைபாடுகளைக் களைய சட்டப்பேரவை தொகுதிதோறும் தனி அதிகாரியை நியமித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
    இதுதொடர்பாக தில்லி சமூக நலத் துறை அமைச்சகம் வெயிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    இந்த அதிகாரி வாரம் இரு முறை, சட்டப்பேரவை உறுப்பினரின் அலுவலகத்துக்கு சென்று, தில்லி அரசின் நிதி உதவி திட்டங்களைப் பெறுவதில் உள்ள குறைபாடுகளைக் களைய நடவடிக்கை எடுப்பார்.
    மாலை 4 மணி முதல் 5 மணி வரை அவர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் அமர்ந்திருந்து குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்வார்.
    இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட தொகுதி எம்எல்ஏவுக்கு அதிகாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும். மார்ச் 31-ம் தேதி வரை இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai