Enable Javscript for better performance
ஷாலிமர் பாக் பாலியல் பலாத்கார சம்பவம்: மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வடமேற்கு தில்லி ஷாலிமர் பாக் பூங்காவில் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஷிவபிரசாத் (எ) பாபு (33), அருண் யாதவ் (36), கமலேஷ் (எ) பாபா (28) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் ஷிவபிரசாத் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அருண் யாதவ் பூச்சிக்கொல்லி மருந்து விநியோகம் செய்யும் வேலைபார்த்து வருகிறார். கமேலேஷ் பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்திக் கொண்டவர். 
    அச்சிறுமி ஷாலிமர் பாக் பகுதியில் ஹெய்தர்பூர் குடிசைப்பகுதியில் உள்ள பூங்காவில் தனது ஆண் நண்பருடன் டிசம்பர் 16-ஆம் தேதி இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் மூவர் சிறுமியின் ஆண் நண்பரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். அதைத் தடுக்க முயன்றை சிறுமியை மூவரும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இது குறித்து வெளியில் சொன்னால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியது வரும் என்று கூறிவிட்டு தப்பினர். இச்சம்பவம் "நிர்பயா' ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தன்று நிகழ்ந்துள்ளது. ஷாலிமர் பாக் பலாத்கார சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai