Enable Javscript for better performance
எஸ்டிஎம்சியில் இயந்திரங்கள் மூலம் குப்பை அள்ளும் திட்டம் அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்டிஎம்சியில் இயந்திரங்கள் மூலம் குப்பை அள்ளும் திட்டம் அறிமுகம்

    By DIN  |   Published on : 08th January 2018 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட  பகுதிகளில் முற்றிலும் இயந்திரங்களால் குப்பை அள்ளும் (எஃப்.சி.டி.எஸ்.)  திட்டம் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. 
    இத் திட்டம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
    தெற்கு தில்லி மாநகராட்சியின் (எஸ்டிஎம்சி) மேற்கு மண்டலத்தில் உள்ள  1,2,7,9,11,20,29 ஆகிய  ஏழு வார்டுகளிலும் முற்றிலும் இயந்திரங்களால் குப்பை அள்ளும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை அறிமுகப்படுத்தி தெற்கு தில்லி மாநகராட்சி துணை மேயர் கைலாஷ் சங்லா பேசியதாவது:
    இத்திட்டம் மூலம் குப்பை அள்ளுவது இலகுவாக்கப்படும். தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளை சுத்தமாகப் பேணும் வகையில், எல்லா வார்டுகளிலும் இத்திட்டம் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  உலர் குப்பைகளையும், ஈர குப்பைகளையும் தனித்தனியாக பிரிக்கக் கூடிய வகையில்  இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெற மக்களின் பங்களிப்புத் தேவை என்றார் அவர். 
    இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.எஸ். சிர்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai