Enable Javscript for better performance
காலாவதி பேருந்துகளின் என்ஜின்கள் மூலம் மின்உற்பத்தி: டிடிசி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காலாவதி பேருந்துகளின் என்ஜின்கள் மூலம் மின்உற்பத்தி: டிடிசி திட்டம்

    By DIN  |   Published on : 08th January 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிஎன்ஜி சார்ந்த பவர் ஜெனரேட்டர்களை உருவாக்குவதற்கு, பயன்பாட்டில் இருந்து ஒதுக்கப்பட்ட பேருந்துகளின் என்ஜின்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) பரிசீலித்து வருகிறது. மாசுவைக் குறைத்து ஆதார வளங்களை சேமிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள டிடிசி திட்டமிட்டு வருகிறது.
    இதுகுறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயன்பாட்டுக் காலத்தைக் கடந்த பேருந்துகளின் என்ஜின்களை பயன்படுத்துவது தொடர்பான முன்மொழிவு குறித்து மாநில போக்குவரத்து ஆணையத்தின் (எஸ்டிஏ) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த முன்மொழிவு தொடர்பான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 
    காலாவதியான பேருந்துகளின் என்ஜின்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பவர் ஜெனரேட்டர்கள் ஆதார வளங்களைச் சேமிக்க உதவியாக இருக்கும். மேலும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மூலம் ஜெனரேட்டர்கள் இயக்கப்படும் என்பதால் இது மாசுவைக் குறைப்பதற்கும் உதவியாக இருக்கும்.
    தில்லியில் டிடிசியின் பல்வேறு பணிமனைகளில் பழைய ஜெனரேட்டர்களை மாற்றுவதற்கு 30 கிலோவோல்ட் ஆம்பியர் கொள்திறன் கொண்ட  32 பவர் ஜெனரேட்டர்கள் தேவைப்படுகின்றன. இதனால்,  பயன்பாட்டில் இருந்து ஒதுக்கப்பட்ட தரைத்தள பேருந்துகளின் பொறியியந்திரங்களை சிஎன்ஜி சார்ந்த பவர் ஜெனரேட்டர்களாக உருவாக்கும் வகையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யுமாறு தில்லி மாநில போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  அதேபோல,  மாசு மற்றும் நிதி தேவைகள் உள்பட அனைத்து அம்சங்களையும் ஆராயுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது பொதுவாக,  7.50 லட்சம் கிலோ மீட்டர் தூரம் இயக்கப்பட்ட அல்லது 10 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பேருந்துகள் காலாவதிக்கு உள்படுத்தப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai