Enable Javscript for better performance
தீ தடுப்பு விதிமீறல்: 9 உணவகங்களுக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    தீ தடுப்பு விதிமுறைகளை மீறியதாக, தில்லி கனாட் பிளேஸில் உள்ள 9 ரெஸ்டாரன்டுகளுக்கு புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள வணிக வளாகமொன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தில்லியிலுள்ள வணிக வளாகங்கள், ரெஸ்டாரன்டுகளில் தீ தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    இதுதொடர்பாக என்டிஎம்சி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
    கனாட் பிளேஸில் உள்ள அனைத்து ரெஸ்டாரன்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 ரெஸ்டாரன்டுகளில் தீ தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. அந்த ரெஸ்டாரன்டுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்கப்படாவிட்டால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் அந்த அதிகாரி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai