Enable Javscript for better performance
பொது போக்குவரத்து அட்டை  திட்டம் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் மெட்ரோ ரயில்,  பேருந்துகளில் பயணம் செய்ய உதவும் வகையில் பொது போக்குவரத்து பயன்பாடு அட்டை (C​O​M​M​ON MO​B​I​L​I​TY CA​R​D) எனும் முன்னோடி திட்டத்தை  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.
    இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பொதுப் போக்குவரத்து பயன்பாடு அட்டை திட்டத்தை  முதல்வர் கேஜரிவால்,  தில்லி தலைமைச் செயலகம் வளாகத்தில்  திங்கள்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்,  தில்லி மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர். 
    தில்லி அரசுப் பேருந்துகளிலும், தில்லி மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்யும் வகையில் பொது போக்குவரத்து பயன்பாடு அட்டை  உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தில்லி அரசு போக்குவரத்து நிறுவனத்தின் 200 பேருந்துகளிலும்,  50 கிளஸ்டர் பேருந்துகளிலும் இந்த அட்டை  அறிமுகப்படுத்த உள்ளது.  இத்தகைய பொது போக்குவரத்து பயன்பாடு அட்டையை அறிமுகப்படுத்திய முதல் மாநகரம் என்ற பெருமையை தில்லி பெற உள்ளது.
    தில்லி மெட்ரோ ரயில் ஸ்மார்ட்  அட்டைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 13 லட்சமாக உள்ளது. அந்த அட்டையைக்  கொண்டு இனி  தில்லி அரசுப் பேருந்துகளிலும் பயணம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai