Enable Javscript for better performance
மதுக்கடை தொடர்பான புகார்களில் மக்களின் முடிவுக்கு அரசு கட்டுப்படும்: முதல்வர் கேஜரிவால்- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கடை தொடர்பான புகார்களில் மக்களின் முடிவுக்கு அரசு கட்டுப்படும்: முதல்வர் கேஜரிவால்

    By DIN  |   Published on : 08th January 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் மதுக்கடை தொடர்பான புகார்களில் பொது மக்கள் மேற்கொள்ளும் முடிவுக்கு அரசு கட்டுப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 
    திலக் நகர் 12-ஆவது பிளாக்கில்  செயல்பட்டு வரும் மதுபானக் கடை தொடர்பான  புகாரில் மக்கள் கருத்து அறியும் "மொஹல்லா சபா'  கூட்டம் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கலந்துகொண்டு  மக்களிடம் கருத்து கேட்டறிந்தனர்.  அப்போது,  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது:
    தற்போது நடைபெறும் கூட்டத்தில் நாங்கள் முடிவெடுக்க வரவில்லை.  பொது மக்கள் முடிவு எடுப்பதை காண்பதற்காகவே வந்துள்ளோம். மதுபானக் கடைகளால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து  சிந்திக்க வேண்டும். மது அருந்துவோரில் சிலர் பெண்களுக்கு தொல்லை அளிப்பது மிகப் பெரியப் பிரச்னையாக கருதப்படுகிறது. அதற்கு தீர்வு காணவே இங்கு கூடியிருக்கிறோம்' என்றார்.
    தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில்,  "அரசின் முடிவுகளில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்.  அதுவே நேரடி ஜனநாயகம்,  சுயராஜ்ஜியம் ஆகும்.  அமைச்சர்களோ, அதிகாரிகளோ மேற்கொள்ளும் முடிவுகளில் குறைகள் இருக்கும். திலக் நகரில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையால் பாதிக்கப்பட்டவர்களும்,  மதுபானக் கடை உரிமையாளரும் இங்கு உள்ளனர். இங்கு மக்களால் எடுக்கப்படும் முடிவால் எந்தவொரு சிக்கலும் இருக்கப் போவதில்லை. அனைவரும் தங்களது கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  மக்களால் எடுக்கப்படும் முடிவை அரசு செயல்படுத்த தயாராக உள்ளது. இதுபோன்ற மதுக்கடைகளால் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக மக்களிடம் கருத்துகளை அறிய மொஹல்லா சபாக்கள் நடத்தப்படும்' என்றார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால். 
    முன்னதாக,  பிரச்னைக்குரிய  மதுபானக் கடையை  மூட வேண்டும் என்று மக்கள் கரங்களை உயர்த்தி தங்களது ஒருமித்த கருத்தை  தெரிவித்தனர். இந்த மொஹல்லா சபாவில் திலக் நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜர்னைல் சிங்,  அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai