Enable Javscript for better performance
மயூர் விஹார் கணபதி கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் மகோத்ஸவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

  

  மயூர் விஹார் கணபதி கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் மகோத்ஸவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

  By DIN  |   Published on : 08th January 2018 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிழக்கு தில்லி,   மயூர்விஹார் பேஸ் 2-இல் அமைந்துள்ள அருள்மிகு காருண்ய மகா கணபதி கோயிலில் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண மகா உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
  இக்கோயிலில் 27-ஆவது வருடாந்திர மார்கழி மகா உத்ஸவம் டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கி  நடைபெற்று வருகிறது.  இந்த  உத்ஸவத்தையொட்டி,  இக்கோயிலில் தினமும் அதிகாலையில் திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி,  திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. அதிகாலையில் கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் பக்தர்கள் பலர் பங்கேற்று வருகின்றனர். 
  இந்த மகா உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 29-ஆம் தேதியும்,  ஜனவரி 2-இல் திருவாதிரை விழாவும் நடைபெற்றன.  முக்கிய வைபவமான ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை  காலை பஞ்சராத்ர ஆகம விதிகளின்படி நடைபெற்றது. 
  இத்திருக்கல்யாணத்தை லோதி ரோடு ஸ்ரீராம் மந்திரின் முன்னாள் தலைமை அர்ச்சகர் திருநாங்கூர்  சௌந்தரராஜன் ஸ்வாமி நடத்தி வைத்தார். அப்போது, ஊஞ்சல்,  பிடி சுற்றுதல்,  மாலை மாற்றுதல், புன்யஹாவாசகம்,  ரக்ஸ்யை, ஹோமம், கன்னிகாதானம்,  திருமாங்கல்ய தாரணம், பொறியிடல், சீர்பாடல், ஆசிர்வாதம் உள்ளிட்ட திருமணத்தின்போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன.  இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.  நிகழ்ச்சி முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
  உபன்யாஸம்: மாலையில் லால் பகதூர் சாஸ்திரி அகாதெமியைச் சேர்ந்த டாக்டர் உ.வே. நடாதுர் ஆராவமுதாச்சாரியார் பங்கேற்ற "திருப்பாவை கண்ணோட்டத்தில் செய்யத் தக்கவை, செய்யக்கூடாதவை' எனும் தலைப்பில்  சிறப்பு உபன்யாஸம் நடைபெற்றது.
  நூல் வெளியீடு: அதைத் தொடர்ந்து,  " ஸ்ரீலட்சுமி நாராயண கடாட்சம்,  ஸ்ரீ லட்சுமி நாராயண சஹஸ்ரநாமம், நாமாவளி மற்றும் இதர ஸ்லோகங்கள்' எனும் தலைப்பில்  சுவாமியின் ஸ்லோக புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நூலை தில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே. ராமமூர்த்தி வெளியிட  அதை டாக்டர் உ.வே. நடாதுர் ஆராவமுதாச்சாரியார்,  ஸ்ரீ கணேஷ் சேவா சமாஜத்தின் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர்கள் டாக்டர் கே. ராமலிங்கம்,  ஆர்.கிருஷ்ணன்ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 
  பரதநாட்டியம்: இதைத் தொடர்ந்து, பரதநாட்டியக் கலைஞர் கவிதா ரிஷிகேஷின்  மாணவர்கள் பங்கேற்ற "ஸ்ரீலட்சுமி கல்யாண வைபோகமே' எனும் தலைப்பில் பரத நாட்டிய நாடக நிகஜ்ழ்ச்சி நடைபெற்றது. இதற்கான திரைக்கதையை கிருஷ்ணன் வடித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. குழந்தைகளுக்கு ஒய்வுபெற்ற நீதிபதி கே.ராமமூர்த்தி பரிசு வழங்கிப் பாராட்டினார். 
  "கூடாரை வெல்லும்....': ஆண்டாளின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக மதுரை அருகே உள்ள திருமாலிருஞ்சோலை எனும் அழகர்கோயில் அழகருக்கு ராமானுஜர் அக்காரைவடிசில் வழங்கியதை நினைவுகூரும் வகையில் ஜனவரி 11-ஆம் தேதி "கூடாரை வெல்லும்...' உத்ஸவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai