Enable Javscript for better performance
என்டிஎம்சி சார்பில் 5,000 பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    என்டிஎம்சி சார்பில் 5,000 பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

    By DIN  |   Published on : 09th January 2018 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டுதோறும் சுமார் 5,000 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்கவுள்ளதாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தெரிவித்தது.
    இது தொடர்பாக என்டிஎம்சி தலைவர் நரேஷ் குமார் கூறியதாவது:
    கடந்த ஆண்டில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 1080 பேருக்கு என்டிஎம்சி சார்பில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், 588 பேர் பெண்கள் ஆவர். இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும்  5,000 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  பார்மசி உதவியாளர், விஷன் டெக்னீசியன், அவசர மருத்துவத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 
    பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன என்றார் அவர். 
    இந்நிலையில், பிரதான் மந்திரி கௌசால் விகாஷ் கேந்திரா (ல்ந்ஸ்ந்),  பயிற்சி நிலையத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற 175 பேருக்கு  என்டிஎம்சியின் கீழ் செயல்படும் சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள்,  சூரிய சக்தி மினநிலையங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai