Enable Javscript for better performance
கிழக்கு தில்லியில் சிறுவன்  மர்மச் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு தில்லியில் ஆறு வயது சிறுவன் மர்மமான முறையில் காயமடைந்து இறந்தான்.  இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: சம்பவத்தன்று மாலை கிழக்கு தில்லி,  விவேக் விஹார் பகுதி தெருவில் 6 வயது சிறுவன் சத்யம், காயத்துடன் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். 
    மேலும்,  சிறுவன் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தான். இது தொடர்பாக  உள்ளூர் மக்கள் கூறுகையில், "அப்பகுதியில் கார்ட்போர்டு அட்டைகள் ஏற்றப்பட்ட லாரியில் இருந்து அட்டைகள் சரிந்து சிறுவன் மீது விழுந்தது. இதில் சிறுவன் காயமடைந்ததான்' என்றனர்.
    இதற்கிடையே,   உயிரிழந்த சிறுவன் வழக்கமாக விளையாடச் செல்லும் பக்கத்து வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து  தவறி விழுந்து காயமடைந்திருக்கலாமா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai