Enable Javscript for better performance
குளிரில் 44 பேர் உயிரிழந்த விவகாரம்: "டியுஎஸ்ஐபி' அதிகாரிக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    குளிரில் 44 பேர் உயிரிழந்த விவகாரம்: "டியுஎஸ்ஐபி' அதிகாரிக்கு நோட்டீஸ்

    By DIN  |   Published on : 09th January 2018 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் குளிரில் 44 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து விளக்கம் அளிக்க தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரிய (டியுஎஸ்ஐபி) தலைமைச் செயல் அதிகாரிக்கு  முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
    கடந்த 6 நாள்களில் மட்டும்,  தில்லியில் உள்ள சாலையோரங்களில் தூங்கிய 44 பேர் குளிரால் உயிரிழந்துள்ளனர். அவர்களின் விவரம் அனைத்தும் காவல்துறையின் ஆவணங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 4 மற்றும் 2 வயதுடைய குழந்தைகளும் இடம் பெற்றுள்ளனர்.இது தொடர்பாக  ஊடகங்களில்  செய்தி வெளியாகியிருந்தது.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:  குளிரால் 44 பேர் உயிரிழந்து விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இது குறித்து விளக்கம் அளிக்க தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாடு வாரியத் தலைமைச் செயல் அதிகாரிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பயனற்ற அதிகாரியை துணைநிலை ஆளுநர்  கடந்த ஆண்டு நியமித்தார். இதுபோன்ற அதிகாரிகளை நியமிப்பதற்கு முன் எங்களுடன் கலந்து ஆலோசிக்க துணைநிலை ஆளுநர் மறுக்கிறார். இதுபோன்ற சூழலில் எப்படி அரசாங்கத்தை நடத்த முடியும்? என கேள்வியெழுப்பியுள்ளார்.
    டியுஎஸ்ஐபி சிஇஓ விளக்கம்: இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக  தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத் தலைமை செயல் அதிகாரி சுக்வீர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    தில்லியில் குளிரில் 44 பேர் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கும் தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் திறமைன்மைக்கும் தொடர்பு இல்லை. இறந்தவர்கள் எனக் கூறப்படுவோர் தொடர்பான விவரங்களை எந்தவொரு அமைப்பிடமும் தெரிவிக்கவில்லை. தில்லியில் குளிர் காலத்தில் சிலர் இறக்க நேரிடுகிறது. ஆனால், அதற்காக இறந்தவர்கள் எல்லாம் இரவு நேர தங்கும் குடில் கிடைக்காமல் இறந்தவிட்டனர் எனக் கூற முடியாது.
    நிகழாண்டு செயல்படுத்தியுள்ள குளிர்கால செயலாக்க திட்டத்தின் படி மூன்று அடுக்கு கண்காணிப்பு முறை உள்ளது.  ஒவ்வொரு நாளும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டு, தலைநகரில் உள்ள இரவு நேரத் தங்கும் குடில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. 
    நிகழாண்டு  அதிகபட்சமாக இரவு நேரத் தங்கும் குடில்களில் தங்கியோர் எண்ணிக்கை அதிகபட்சமாக  13,510  ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம். வாரியத்தின் சார்பில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையும்,  மீட்பு அணியும் இயங்கி வருகின்றன. கடந்த மாதம் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு இரவு நேரத் தங்கும் குடில்களில் தங்க வைப்பட்டனர் என்றார் சுக்வீர் சிங்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai