Enable Javscript for better performance
பஞ்ச திராவிட பிராமண சபா சார்பில் ஜாதகப் பரிவர்த்தனை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பஞ்ச திராவிட பிராமண சபா சார்பில் ஜாதகப் பரிவர்த்தனை நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 09th January 2018 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பஞ்ச திராவிட பிராமண சபா சார்பில் ஜாதகப் பரிவர்த்தனை நிகழ்ச்சி  நொய்டாவில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
    இந்நிகழ்ச்சியில் வரன் மற்றும் வதுக்களின் பெற்றோர்களின் அறிமுகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து,  ஜாதகங்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டன. சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நொய்டா சந்திரசேகர், கண்ணன், பாலா உள்ளிட்டோர் செய்திருந்தனர். பஞ்ச திராவிட  பிராமண சபாவின் செயல்பாடுகள் குறித்து சபாவின் தேசியத் தலைநகர் வலயப் பகுதி ஒருங்கிணைப்பாளர் விஸ்வேஸ்வரன்அய்யர் எடுத்துரைத்தார். முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் இந்த அமைப்பு மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 1200-க்கும் மேற்பட்ட பிராமண குடும்பங்களில் ஜாதகப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai