Enable Javscript for better performance
பிரகதி மைதானில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட மாட்டாது: தில்லி அரசு உறுதி- Dinamani

சுடச்சுட

    

    பிரகதி மைதானில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட மாட்டாது: தில்லி அரசு உறுதி

    By DIN  |   Published on : 09th January 2018 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரகதி மைதானில் நடைபெற்று வரும் மறுமேம்பாட்டுப் பணிக்காக அங்குள்ள மரங்கள் உரிய அனுமதியில்லாமல் வெட்டப்பட மாட்டாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) தில்லி அரசு உறுதியளித்துள்ளது.
    தில்லியில் உள்ள பிரகதி மைதானில் பல்வேறு சர்வதேசக் கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். 
    இந்நிலையில்,  இந்த மைதானத்தை சர்வதேசத் தரத்துக்கு உருமாற்றும் வகையில் மறுமேம்பாட்டுப் பணிகளை  இந்திய வர்த்தக வளர்ச்சி நிறுவனம் (ஐடிபிஓ) மேற்கொண்டு வருகிறது.
    அதன்படி,  பிரகதி மைதானின் குறுக்கே மதுரா சாலை மற்றும் ரிங் ரோட்டை இணைக்கும் வகையில் ஆறு வழிப் பிரிப்பு சுரங்கப் பாதை உள்பட  பிரகதி மைதானத்தின் உள்பகுதி, வெளிப் பகுதி ஆகியவற்றில் போக்குவரத்தை எளிதாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்,  மதுரா சாலையை சமிக்ஞை விளக்குகள் இல்லாத பகுதியாக்குவதற்காக  பிரகதி மைதானத்துக்கு செல்ல பூமிக்கு அடியில் சுரங்கப் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதுதவிர கண்காட்சி,  மாநாட்டு வளாகத்தில் 4,800 வாகனங்களை நிறுத்தும் வகையில் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    இந்நிலையில்,  பிரகதி மைதானில் மறுமேம்பாட்டு பணிகளுக்காக தில்லி அரசு  சரமாரியாக மரங்களை வெட்டுவதாக இந்திய தேசிய விளையாட்டு மன்றம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில்  முறையிடப்பட்டது.  
    இந்த மனு மீதான விசாரணை  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி (பொறுப்பு) யு.டி. சால்வி தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. 
    அப்போது,  தில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "புது தில்லி, துக்ளகாபாத், தெற்கு கோட்டத்தின் வனஅதிகாரி அனுமதியின்றி பிரகதி மைதான் பகுதியில் மரங்கள் வெட்டப்பட மாட்டாது. இந்த விஷயத்தில் தில்லி அரசு உறுதியாக உள்ளது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai