Enable Javscript for better performance
ஓடும் காரில் 17 வயது சிறுமி பலாத்காரம்:  2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு- Dinamani

சுடச்சுட

    

    ஓடும் காரில் 17 வயது சிறுமி பலாத்காரம்:  2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

    By DIN  |   Published on : 10th January 2018 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓடும் காரில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை தேடி வருவதாக தில்லி காவல் துறையினர் தெரிவித்தனர்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:  அசோக் விஹாரைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது வீட்டை விட்டு கடந்த வாரம் வெளியேறினார். பின்னர், பங்கலா சாகிப் குருத்வாராவில் தங்கியிருந்த அவர், அங்கிருந்த இளைஞருடன் சேர்ந்து சில இடங்களுக்கு காரில் சென்றுள்ளார்.
    இந்நிலையில்,  சம்பவத்தன்று அச்சிறுமியை அவரது வீட்டில் கொண்டுபோய் விடுவதாகக் கூறி அந்த இளைஞர் தனது காரில் ஏற்றிக் கொண்டார்.  அவருடன் கூட்டாளியும் வந்திருந்தார். காரை இளைஞரின் நண்பர் ஓட்டிச் சென்றார்.  அப்போது, காரில் இருந்தவாறு அந்தச் சிறுமியை இளைஞர் பலாத்காரம் செய்தார்.  பிறகு,  சிறுமியை குருத்வாரா பகுதியில் இறக்கிவிட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிறுமி கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  
    அதன்பேரில் வழக்குப் பதிந்து இளைஞரையும், அவரது கூட்டாளியையும் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai