Enable Javscript for better performance
ஜம்மு - காஷ்மீரில்  துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகள்  இரண்டு பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு - காஷ்மீரில்  துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகள்  இரண்டு பேர் சாவு

    By DIN  |   Published on : 10th January 2018 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    இதுதொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    அனந்த்நாக் மாவட்டத்தின் லார்னோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். 
    அப்போது, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai