Enable Javscript for better performance
டெங்கு: கடந்த ஆண்டில் 10 பேர் உயிரிழப்பு: மாநகராட்சி தகவல்- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு: கடந்த ஆண்டில் 10 பேர் உயிரிழப்பு: மாநகராட்சி தகவல்

    By DIN  |   Published on : 10th January 2018 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த ஆண்டில் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளாகி 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாநகராட்சியின் புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி வரை 4 பேர் மட்டுமே டெங்குவால் உயிரிழந்ததாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,  உயிரிழப்பு குறித்த முழு விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
    தில்லியில் கடந்த ஆண்டு சீசனில்  டெங்குவால்  பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 9,271 என்று  தில்லியின் மூன்று மாநகராட்சிகள் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
    இந்த அறிக்கையை தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதேபோன்று,  கடந்த ஆண்டில்  டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் தலைநகரில் சிக்குன்குனியா,  மலேரியா நோயால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை முறையே 940 மற்றும் 1,142 ஆகும்.  கடந்த ஆண்டில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 9,271 பேர்களில் 4,726 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள். 4,545 பேர் பிற மாநிலங்களில் இருந்து தில்லிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் ஆவர். 
    கொசுக் கடியால் ஏற்படும் நோயான டெங்குவால் முதல் நோயாளி பாதிக்கப்பட்டிருந்தது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி கண்டறியப்பட்டார்.  டெங்கு நோயால் சர் கங்கா ராம் மருத்துவமனையில்  12 வயது சிறுவன் உயிரிழந்தான். மொத்தம் 10 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.  
    இவர்களில் 3 பேர் தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியிலும்,  2 பேர் வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியிலும் இறந்தவர்கள் ஆவர்.  ஐந்து பேர் தில்லியைச் சேராதவர்கள். எனினும்,  அவர்கள் தலைநகரில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இறந்தவர்கள் என மாநகராட்சி வெளியிட்ட  தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai