Enable Javscript for better performance
தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.2 டிகிரி!- Dinamani

சுடச்சுட

    

    தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 4.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது இந்த பருவகாலத்தின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலையை விட 3 டிகிரி குறைவானது என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
    இதனிடையே, தில்லி மார்க்கமாக வட மாநிலங்களுக்கு செல்லும் 45 ரயில்கள் திங்கள்கிழமை தாமதமாக இயக்கப்பட்டதாகவும், 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 
    தில்லியில் கடந்த சில வாரங்களாக அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. 
    இதனால் சாலை போக்குவரத்து மட்டுமன்றி, ரயில், விமான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 
    வட மாநிலங்கள் முழுவதும் நிலவும் கடும் பனி மூட்டத்தால் வாகனங்கள் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன. 
    அடர் பனிமூட்டத்தால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. 
    இதனால் வட மாநிலங்களுக்கு செல்லும் ஏராளமான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 
    தில்லியில் காலை நேரங்களில் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. பாலம் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் காண்புதிறன் 400 மீட்டராகவும், சஃப்தர்ஜங் மையத்தில் 700 மீட்டராகவும் பதிவாகியதாக வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai